search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவீன மருத்துவமனை"

    எழும்பூர் பழைய கமி‌ஷனர் அலுவலகம் அருகே பாந்தியன் சாலையில் போலீசாருக்கு நவீன மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

    சென்னை:

    எழும்பூர் பழைய கமி‌ஷனர் ஆபீஸ் அருகே பாந்தியன் சாலையில் போலீசாருக்கான மருத்துவமனை 1964-ம் ஆண்டு கட்டப்பட்டு அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது.

    30 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவ மனையில் தினமும் 500 போலீசார் வந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

    பழமையான இந்த மருத்துவ மனையை நவீனப்படுத்த 2016-ம் ஆண்டு முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.

    தற்போது 4 மாடிகளுடன் 30 ஆயிரம் சதுரஅடி பரப்பில் புதிய கட்டிடம் 50 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

    நவீன சி.டி. ஸ்கேன் மற்றும் லேப் வசகிகள் ‘அல்ட்ரா சவுண்ட்’, எக்ஸ்ரே, இ.சி.ஜி., மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    எழும்பூர் பாந்தியன் சாலையில் பழமையான நிலையில் போலீஸ் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையை ரூ. 10 கோடி செலவில் நவீனப்படுத்தி புதிய கட்டிடம் கட்ட 2016-ம் ஆண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி இப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    இந்த மருத்துவமனையில் பிசியோ தெரபிஸ்டு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் டாக்டர்களும் பணியமர்த்தப்பட உள்ளனர்.

    இந்த மருத்துவமனையில் போலீசாருக்கு 50 படுக்கை வசதிகள், சி.டி. ஸ்கேன், எக்ஸ்ரே, ‘அல்ட்ரா சவுண்ட், மருந்தகம், ஐ.சி.யூ. வார்டு அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 10 கோடி மதிப்பீட்டில் இந்த பணிகள் நடைபெற்றுள்ளது.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    போலீசாருக்காகமாஸ்டர் ஹெல்த் செக்-அப் வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 4 மாடிகளுடன் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த நவீன மருத்துவமனை ஒரு வாரத்திற்குள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

    ×